Connect with us

சாம்பார் சட்னி.. Boat.. ஒரே நாளில் ரெண்டு பட அப்டேட் கொடுத்த யோகி பாபு – சிம்புதேவன் மீண்டும் வருகின்றார்!

செய்திகள்

சாம்பார் சட்னி.. Boat.. ஒரே நாளில் ரெண்டு பட அப்டேட் கொடுத்த யோகி பாபு – சிம்புதேவன் மீண்டும் வருகின்றார்!

பிரபல Disney Hotstar நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிதாக உருவாக உள்ள திரைப்படம் தான் சாம்பார் சட்னி. இந்த திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் யோகி பாபு மற்றும் பிரபல நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளனர்.

நேற்று இந்த திரைப்படத்தின் பூஜை முடிக்கப்பட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளது. அதேபோல வெகு நாட்கள் கழித்து மீண்டும் இயக்க வந்துள்ளார் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் சிம்பு தேவன்.

நெய்தல் நதியின் கதையை கூறும் ஒரு படமாக Boat என்ற திரைப்படத்தை ஜிப்ரான் இசையில் மக்களுக்கு அளிக்க உள்ளார் சிம்புதேவன். இந்த திரைப்படத்திலும் பிரபல நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களும் தற்பொழுது வெளியாகி உள்ளது விரைவில் இந்த இரு படங்களுக்கான படபிடிப்பு பணிகளும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யோகி பாபு நடிப்பில் மாவீரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில் யோகி பாபு நடிப்பில் பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருவதும், உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More in செய்திகள்

To Top