Connect with us

எல்லாம் உங்களுக்காக.. பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி.. ஒன்று சேரும் யுவன் மற்றும் STR – எங்கே? எப்போது?

செய்திகள்

எல்லாம் உங்களுக்காக.. பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி.. ஒன்று சேரும் யுவன் மற்றும் STR – எங்கே? எப்போது?

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தந்தையை போலவே மிக நேர்த்தியான இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசைக்கு பல கோடி பேர் ரசிகர்களாக இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் அவர் அவ்வப்போது நடத்திவரும் High on U1 என்ற இசை நிகழ்ச்சி தற்பொழுது நாளை ஜூலை 15ம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் மலேசியாவில் நடக்க உள்ளது. ஆனால் இதுவரை நடந்த இசை நிகழ்ச்சிகளை விட இது இன்னும் சிறப்பு பெற ஒரு முக்கிய காரணம் இந்த இசை நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜாவோடு இணைந்து பாட உள்ள இரண்டு பாடகர்கள் தான்.

அந்த பாடகர்கள் வேறு யாரும் அல்ல அசத்தல் நடிகர் சிலம்பரசனும் அவரது தந்தை T.ராஜேந்தரும் தான். சிலம்பரசன் ஒரு மிகச் சிறந்த பாடகர் என்பதை அவருடைய பல படங்களில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது தேசிங்கு இயக்கத்தில் தனது 42வது திரைப்படத்தில் அவர் நடித்து வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜாவோடு அவர் இணைந்து பாட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திக் இளம்வழுதி மற்றும் கவிதா சுகுமார் தயாரிப்பில் இந்த இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இதே போல அமெரிக்காவிலும் யுவன் ஷங்கர் ராஜாவை வைத்து இசை நிகழ்ச்சிகள் நடந்த கார்த்திக் மற்றும் கவிதா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Continue Reading
You may also like...

More in செய்திகள்

To Top