செய்திகள்
ஒரு சில நொடிகள் புஷ்பா அல்லு அர்ஜூனாக மாறிய சிவகார்த்திகேயன்.. மாவீரன் பட விழாவில் மாஸ் சம்பவம் !
மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளில் மிகவும் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர் மாவீரன் பட குழுவினர்.
மாவீரன் திரைப்படம் தெலுங்கு மொழியிலும் வெளியாக உள்ளதால் நேற்று ஹைதராபாத்தில் இந்த படத்துக்கான Pre Release Event நடத்தப்பட்டது. பல முன்னணி தெலுங்கு நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்த விழாவின் ஹைலைட்டாக புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் பேசும் வசனத்தை அப்படியே பேசிக்காண்பித்து ரசிகர்களின் மாபெரும் கரகோஷங்களை பெற்றார் சிவகார்த்திகேயன். மெல்ல மெல்ல சிவகார்த்திகேயன் ஒரு பான் இந்தியா நடிகராக மாறி வருவதாகவும் விரைவில் அவர் பாலிவுட் உலகில் என்ட்ரி கொடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாவீரன் திரைப்படத்தில் அதிதி சங்கர், இயக்குனர் மிஸ்கின், மூத்த நடிகை சரிதா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
