செய்திகள்
மீண்டும் சிக்கலில் சிக்கிய கனல் கண்ணன்.. நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசாரால் கைது!
தமிழ் சினிமா மட்டுமல்லாமல், இந்திய சினிமாவில் பல மொழிகளில் சிறந்த சண்டை பயிற்சியாளராக இருந்து வருபவர் தான் கனல் கண்ணன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இவர் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக மதம் சார்ந்த விஷயங்களில் இவர் அடிக்கடி சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் கிறிஸ்துவ மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறி ஜோசப் என்பவர் அளித்த புகாரை எடுத்து நேற்று நாகர்கோயில் சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனை அடுத்து அவர் நாகர்கோவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார், தற்பொழுது 15 நாள் நீதிமன்ற காவலில் அவரை வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும் அதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
