செய்திகள்
“பாலிவுட் ஸ்டைல ஒரு லிவ்விங் டுகெதர்”.. வெளியானது வல்லான் பட ட்ரைலர் – மிரட்டும் சுந்தர். சி!
தனது இயக்குனர் பணியோடு இணைத்து நடிப்பு பணியையும் சிறப்பாக செய்து வரும் பல சூப்பர் ஹிட் நடிகர்களில் ஒருவர் தான் சுந்தர். சி, தற்பொழுது இவருடைய நடிப்பில் வி.ஆர் மணி செய்யோன் என்பவர் இயக்க, வி.ஆர் மணிகண்டராமன் தயாரித்து வெளியிட இருக்கும் திரைப்படம் நான் வல்லான்.
தற்பொழுது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, ஒரு சைக்கோ திரில்லர் கதையாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. தலைவாசல் விஜய் உட்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இறுதியாக சுந்தரி. சி-யின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “காபி வித் காதல்”, அதன் பிறகு தற்போது அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை அவர் இயக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இறுதியாக வி.எஸ் துரை இயக்கத்தில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். சுந்தர்.சி.
தற்பொழுது அரண்மனை பாகம் 4, One 2 One மற்றும் வல்லான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்த 2023ம் ஆண்டில் நடிப்பிலும் சரி இயக்கத்திலும் சரி சற்று பிசியாகவே இருந்து வருகிறார் சுந்தர் சி என்றே கூறலாம்.
