செய்திகள்
‘விஜய் 68’ இணையத்தில் கசிந்த புதிய தகவல்
நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது விஜய்யின் 68-வது படமாகும்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு 2 ஜோடிகள். ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
