செய்திகள்
தளபதி விஜயின் அடுத்த பட அப்டேட் இதோ.. விரைவில் ஆரம்பிக்கும் ஷூட்டிங் – வெங்கட் இன் ஆக்ஷன்!
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் மிக பிரம்மாண்டமான திரைப்படம் தான் லியோ. இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இவ்வளவு பெரிய நடிகர் பட்டாளத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் உண்மையில் சிறந்த ஒரு இயக்குனர்.
லியோ படம் விஜயின் 67வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் தளபதி விஜய் அவர்களின் 68வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் வருகிற அக்டோபர் மாதம் துவங்கும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
லியோ பட பணிகள் முடிந்ததும், சுமார் மூன்று மாத கால ஓய்வுக்கு பிறகு இந்த பட பணிகளில் அவர் ஈடுபடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அந்த படம் 2024ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
வெங்கட் பிரபு நிச்சயம் ஒரு புதிய கதைகளத்தை விஜய்க்காக அமைத்துக் கொண்டு வருகிறார் என்பது நாம் அறிந்ததே. எந்தமரியான கதையாக இது இருக்கப்போகிறது என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
