Connect with us

“தளபதி விஜய் பயிலகம்”.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு – நாளை முதல் துவங்கும் சேவை!

செய்திகள்

“தளபதி விஜய் பயிலகம்”.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு – நாளை முதல் துவங்கும் சேவை!

நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து அவ்வப்போது சில தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு தான் வருகிறது. அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு அவர் மாணவ, மாணவிகளை சந்தித்து பல மணி பேசி மகிழ்ந்து, அவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து சென்றது, முதலாம் தலைமுறை வாக்காளர்களை ஈர்க்கத் துவங்கியது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக இரண்டு நாட்களில் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசிய தளபதி விஜய், மாணவர்களுக்கு செய்யவிருக்கும் அடுத்த கட்ட நலத்திட்டங்கள் பற்றி உரையாற்றினார்.

தற்போது அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அதன் பொதுச்செயலாளர் ஆனந்த் செய்தியாளர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தளபதி அவர்களின் சொல்லுக்கு இணங்க வரும் ஜூலை 15ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரின் திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் வழங்குவது போன்ற நலத்திட்டங்களை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் “தளபதி விஜய் பயிலகம்” ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

More in செய்திகள்

To Top