செய்திகள்
ஒரு வருடத்தை நிறைவு செய்த திருச்சிற்றம்பலம்..கொண்டாடிய படக்குழு
மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றபலம். இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திருச்சிற்றபலம் திரைப்படம் வசூலிலும் புதிய சாதனையை படைத்தது. இப்படம் உலகளவில் ரூ. 110 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இப்படம் வெளிவந்து ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில், படக்குழு ஒன்றாக இணைந்து இதை கொண்டாடியுள்ளனர்.
