Connect with us

மீண்டும் ஒரு மலையாள படம்.. சைலெண்டாக ரெடியாகும் த்ரிஷா.. ஹீரோ யார் தெரியுமா?

செய்திகள்

மீண்டும் ஒரு மலையாள படம்.. சைலெண்டாக ரெடியாகும் த்ரிஷா.. ஹீரோ யார் தெரியுமா?

கடந்த 2020ம் ஆண்டு வெளியான Forensic என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர்கள் தான் அகில் பவுல் மற்றும் அனாஸ் கான். இந்த திரைப்படம் மலையாள திரை உலகில் பெரும் வரவேற்பை பெற்றது. டோவினோ தாமஸ் திரை வரலாற்றில் இந்த திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படம் என்றால் அது மிகையல்ல.

அந்த வகையில் மீண்டும் ஒரு மலையாள திரைப்படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் அகில் பவுல், அனாஸ் கான் ஆகியோர் இணையவுள்ளார்கள். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை மடோனா செபஸ்டின் ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடிக்க, 90ஸ் கிட்ஸின் அன்பு நாயகி திரிஷா இந்த படத்தில் இணைந்துள்ளார்.

முதல் முறையாக டோவினோ தாமஸுடன் இணைந்து நடிக்க உள்ளார் திரிஷா. ராம் படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் மூன்றாவது மலையாள திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதம் முதல் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாகவே வாழ்ந்த திரிஷா, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகின்றார். அந்த வகையில் இந்த படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவுள்ளது.

More in செய்திகள்

To Top