செய்திகள்
வெற்றிகரமாக 50 படங்கள்.. அனைவருக்கும் நன்றி சொன்ன வரலக்ஷ்மி – கடைசில பண்ண மிமிக்ரி தான் அல்டிமேட்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான சிம்புவின் “போடா போடி” திரைப்படத்தின் மூலம் நாயகியாக களமிறங்கியவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல நடிகர் சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவுக்கும் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலங்களில் வரலட்சுமியை மிகவும் கண்டிப்பாக வளர்த்து வந்துள்ளார் சரத்குமார், பல திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு வந்தபொழுதும் அவற்றை சரத்குமார் தட்டிக் கழித்துள்ளார். இந்த சூழலில் தான் தந்தையிடம் அனுமதி வாங்கி வரலக்ஷ்மி நடிப்பில் போடா போடி திரைப்படம் வெளியானது.
தற்பொழுது தனது சினிமாவில் சுமார் 11 ஆண்டுகளாக அவர் பயணித்து வருகிறார், இந்நிலையில் தனது 50வது படத்தை நடித்து முடித்துள்ளதாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை தெரிவித்துள்ளார் வரலட்சுமி. எப்பொழுதும் துருதுரு என்றும் தைரியமாகவும் அனைத்தையும் எதிர்கொண்டு வரும் வரலட்சுமி சரத்குமார் இந்த 11 வருட பயணத்தில் 50 படங்களை நான் நடிப்பதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தனது நன்றிகளை உரித்தாக்கி உள்ளார்.
மேலும் அவர் வெளியிட்ட ஒரு காணொளியில் அண்மையில் பிரபலமான ஒரு வசனமான “பெண் தானே.. Softஆக இருப்பாள் என்று நினைக்க வேண்டாம்.. நான் கொஞ்சம் Rugged டைப் என்ற வசனத்தை மிமிக்கிரி செய்து அசத்தியுள்ளார்.
