செய்திகள்
உடைந்தது சஸ்பென்ஸ்.. மாவீரன் படத்தில் வரும் தெய்வ குரல் அவரோடது தான் – நன்றி சொன்ன SK!
நீண்ட நாட்களாக நிலவி வந்த ஒரு சந்தேகத்திற்கு தற்பொழுது விடை கிடைத்துள்ளது, மாவீரன் படத்தில் அடிக்கடி சிவகார்த்திகேயன் வானை நோக்கி பார்க்க, அங்கிருந்து கேட்கும் ஒரு குரல் சொல்வதை வைத்து தான் அடுத்தடுத்த காரியங்களை அவர் செய்வது போன்ற காட்சிகள் ட்ரைலரில் இடம்பெற்றது.
இந்நிலையில் வானில் இருந்து அவருக்கு கேட்கும் அந்த குரல் நடிகர் தனுஷின் குரல் என்று சிலர் கூற, சிலர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் குரல் தான் அது என்று கூறி வந்தனர். இந்நிலையில் இன்று மாலை ஒரு சர்ப்ரைஸ் ஒன்றை வெளியிடுவதாக மாவீரன் பட குழு முன்பே அறிவித்திருந்தது.
அந்த வகையில் ஒவ்வொரு முறையும் சிவகார்த்திகேயன் வானை நோக்கி பார்க்கும்பொழுது “வீரமே ஜெயம்” என்று சொல்லி அவரை உத்வேகப்படுத்தும் குரல் மக்கள் செல்வனுடையது என்று தெரியவந்துள்ளது. அன்பு சகோதரர் விஜய் சேதுபதி குரல் மூலமாக மாவீரன் படத்தில் இணைந்ததற்கு நன்றி என்று சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில், வரும் ஜூலை 14ம் தேதி இந்த படம் உலக அளவில் வெளியாகவுள்ளது. தமிழகம், பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் நடந்த ப்ரோமோஷன் பணிகளை தொடர்ந்து, இன்று மலேசியாவிலும் நாளை துபாயிலும் ப்ரோமோஷன் பணிகள் நடக்கவுள்ளது.
