Connect with us

இனிதே தனது பணியை முடித்த நடிகர் விஜய்.. நன்றி சொல்லி ட்வீட் போட்ட லோகேஷ் கனகராஜ்!

செய்திகள்

இனிதே தனது பணியை முடித்த நடிகர் விஜய்.. நன்றி சொல்லி ட்வீட் போட்ட லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 67வது திரைப்படமாக நடித்து வரும் திரைப்படம் தான் லியோ. காஷ்மீர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

ஒரு மாபெரும் நடிகர் பட்டாளத்தை கொண்டு மிக நேர்த்தியாக இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவின்படி விஜய் அவர்கள் லியோ படத்திற்கான தனது பணிகளை முடித்துள்ளார். (டப்பிங் பணிகளையும் அவர் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது)

இரண்டாவது முறை தன்னுடன் இணைந்து பணியாற்றியதற்காக நன்றி கூறி, மாஸ்டர் திரைப்படத்தில் வெளியிட்டது போலவே ஒரு புகைப்படத்தை தற்பொழுது வெளியிட்டு, ரசிகர்களை சந்தோஷ கடலில் மூழ்கடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

விரைவில் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் VFX பணிகளுக்காக வெளிநாட்டுக்கு செல்ல உள்ளதாகவும். அந்த பணிகள் முடிந்து, குறிப்பிட்டு தேதியில் படம் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. நடிகர் விஜய் 3 மாத ஓய்வுக்கு பிறகு அவரது அடுத்த பட பணிகளை துவங்குவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது

More in செய்திகள்

To Top