செய்திகள்
அடி மேல் அடி வாங்கும் லியோ திரைப்படம்…இதற்கும் தடையா??
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
கடந்த 30ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தகவல்கள் பரவியது. ஆனால், பாதுகாப்பு காரணம் காட்டி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
வழக்கமாக விஜய் படங்களின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியானால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரோகிணி தியேட்டர் முன்பு திரண்டு கொண்டாடுவார்கள். ஆனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
அதிகாலை 4 மணி காட்சிகள், இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு என விஜய்யின் லியோ படத்துக்கு ஏகப்பட்ட அனுமதிகள் மறுக்கப்படுவதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
