செய்திகள்
சண்முக பாண்டியனின் அடுத்த படம் ரெடி.. படத்தில் இணைந்த பிரபல நடிகர் – கதை என்ன தெரியுமா?
பிரபல நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் புதிதாக ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. ஏற்கனவே இவர் ஒரு சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“டைரக்டர்ஸ் சினிமாஸ்” என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படமாக இந்த படம் உள்ளது. ரேக்ளா மற்றும் வால்டர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அன்பு இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை நேற்று வெகு விமர்சையாக நடந்தது தற்பொழுது இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் துவங்கியுள்ளது.
வரும் ஆடி பதினெட்டாம் நாள் இந்த படத்தின் தலைப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் காட்டு யானைகளை மையமாகக் கொண்டு உருவாக உள்ளது என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இசையமைப்பாளர் கஸ்தூரிராஜா இசையில் இந்த படத்தில் யாமினி மற்றும் பிரபல மூத்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் கேரள மாநில காட்டுப் பகுதிகளிலும் ஒரிசா மற்றும் தாய்லாந்திலும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
