செய்திகள்
உறுதியான கூட்டணி.. ஹரி இயக்கத்தில் உருவாகும் விஷால் 34 – DSPஐ வெல்கம் செய்த படக்குழு!
நடிகர் விஷால் தற்பொழுது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குனர்கள் எஸ்.ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் மற்றும் நடிகர் சுனில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஷால் தனது 34வது திரைப்படம் குறித்த தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளார். முன்பு கூறியதை போலவே இயக்குனர் ஹரி இந்த படத்தை இயக்கு இருப்பதாகவும். பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம், பிரபல ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கூடுதல் சிறப்பாக கங்குவா படத்திற்கு தற்போது இசையமைத்து வரும் பிரபல இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விஷால் நடிக்கும் மார்க் அன்டனி படத்தின் “அதிருதா” என்ற முதல் சிங்கிள் பாடலை தமிழ் மொழியில் பிரபல இயக்குனர் T. ராஜேந்தர் பாடியுள்ள நிலையில் தெலுங்கு மொழியில் நாயகன் விஷால் பாடியுள்ளார். ஆகவே இந்த திரைப்படத்தின் மூலம் அவர் முதல் முதலாக ஒரு பாடகராக அறிமுகமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
