செய்திகள்
சங்கரின் அடுத்த படைப்பு என்ன? முணுமுணுக்கும் கோலிவுட் – ஹீரோ தளபதி விஜயா? அல்லது “அவரா”?
தமிழ் சினிமாவுக்குள் பிரம்மாண்டம் என்ற ஒரு விஷயத்தை புகுத்தி, அதில் வெற்றி கண்டு வரும் ஒரு மாபெரும் இயக்குனர் தான் சங்கர். தற்பொழுது இவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம். பல முன்னணி நடிகர், நடிகைகளை கொண்டு இந்த திரைப்படத்தை அவர் உருவாக்கி வருகிறார்.
சவுத் ஆப்பிரிக்கா, தாய்ப்பே உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இடையில் ஏற்பட்ட சில சிக்கல்களால் இந்த படம் தாமதமான நிலையிலும் தற்பொழுது சிறப்பாக உருவாகி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் வழக்கம்போல தனது நேர்த்தியான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல இந்த பட வேலைகளை கவனித்து வரும் அதே நேரத்தில், ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தையும் இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார்.
இரு பட பணிகளிலும் பிஸியாக இருந்து வரும் இவர், இந்த இரண்டு படங்களை முடித்த பிறகு, சில கால ஓய்வுக்குப் பிறகு தனது கனவு திரைப்படங்களில் ஒன்றான “வேல்பாரி” திரைப்படத்தை இயக்க துவங்குவார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அதே போல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்த படத்தில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கோலிவுட் வட்டார செய்திகள் கூறுகின்றது.
